vaagai

“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்

பரவும் வகை செய்தல் வேண்டும்”

--பாரதியார்

வாகை தமிழ்ச்சங்கம் - அறிமுகம்

தமிழன்னையின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கமாய் மிளிர்கிறது நமது வாகை தமிழ்ச்சங்கம். தமிழக அரசு அனுமதி பெற்று, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை சார்ந்த அறிவை இக்கால அறிவியல் சிந்தனை & திறன்களுடன் அனைத்து தரப்பினரிடமும் ஊக்குவித்தலையும் வளர்த்தலையும் மேம்படுத்துதலையும் நோக்கமாகக்கொண்டு வாகை தமிழ்ச்சங்கம் இயங்கி வருகிறது. நமது வாகை தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் மேலும் பல செயல்திட்டங்களின் கீழும் அனுமதி பெற்ற தன்னார்வல, தமிழ்சார்ந்த சமூக சேவை நோக்கம் கொண்ட அமைப்பாகும். மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் அதிகாரப்பூர்வ உறுப்பினராக இணைத்தது மட்டுமின்றி, உள்நாட்டு & பன்னாட்டு அளவிலான பலதரப்பட்ட மக்கள் வயது வேறுபாடின்றி நமது வாகை தமிழ்ச்சங்கத்தில் இணைந்து தத்தமது திறன்களை மேம்படுத்தவும் வெளிக்கொணரவுமான களமாகத் திகழ்ந்து வருகிறது. இவ்வமைப்பின் தொடர் சாதனைகளுக்குக் காரணம் என்னுடன் பயணித்து வரும் தமிழ்ச்சான்றோரும் வாகை தமிழ்ச்சங்க குடும்ப உறுப்பினருமே ஆவர். தொடர்ந்து தமிழ்ப்பணியாற்றிட உந்துதலாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Vaagai Tamilsangam Head
மா. மனோஜ்குமார்

தலைவர்

வாகை தமிழ்ச்சங்கம்

நாமக்கல்

Get in touch

நம் வாகை பனுவல் மன்றத்தின் இம்மாத புத்தக மதிப்புரை நிகழ்வு 30.12.2025 மாலை 6.30 மணியளவில் நடைபெறும்.

நிகழ்விற்கான இணைப்பு : https://meet.google.com/mst-ayeg-bgy

தமிழ் உறவுகள் அனைவரும் தவறாது நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நிகழ்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் குழுவில் இணையலாம்.

மேலும் விவரங்களுக்கு: https://chat.whatsapp.com/HTFzx1s1yRW84YZuXIKxYk

Vision And Mission

நோக்கு

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை சார்ந்த அறிவை இக்கால அறிவியல் சிந்தனை & திறன்களுடன் அனைத்து தரப்பினரிடமும் ஊக்குவித்தலும், வளர்த்தலும், மேம்படுத்துதலும்.

போக்கு

  • தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை சார்ந்த அறிவை இக்கால அறிவியல் சிந்தனை & திறன்களுடன் அனைத்து தரப்பினரிடமும் ஊக்குவித்தலும், வளர்த்தலும், மேம்படுத்துதலும்.

  • வாகை தமிழ்ச்சங்கம் தமிழின் கலாச்சார-மொழியியல் பாரம்பரியத்தில் ஆர்வமுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் தொண்டாற்றும் ஓர் இலாப நோக்கற்ற, மதச்சார்பற்ற, கலாச்சார-சமூக அமைப்பாகும்.

  • கற்றல், கற்பித்தல், எழுதுதல், வாசித்தல் போன்ற திறன்களுக்குப் பயிற்சியளித்தலும், வெளிப்படுத்துதலும் மேம்படுத்துதலும் செய்தல்.

  • கருத்தரங்குகள், வினாடி வினாக்கள், ஆசிரிய-மாணவ மேம்பாட்டுத் திட்டங்கள், ஆய்வரங்கங்கள் ஆகிய நிகழ்வுகள் மூலம் தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுதல்.

  • தலைசிறந்த தமிழ் ஆளுமைகள், சிறந்த கலைஞர்கள், துறைசார், திறன்சார்ந்த வல்லுநர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்குப் பட்டங்களும் விருதுகளும் வழங்கிப் பெருமைப்படுத்துதல்.

அங்கீகாரங்களும் அனுமதிகளும்

Vaagai Team Vaagai Team